டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி – பீதியடைந்த பொதுமக்கள்

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். இதனா, பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். தற்போது இவர், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில், குடும்பத்துடன் வசிக்கிறார். இவருக்கு சுபாஷினி, நிஷாந்தினி ஆகிய மகள்கள் உள்ளனர். மூத்தமகள் சுபாஷினி, அரசு சிற்பக்கல்லுாரியிலும், 2வது மகள் நிஷாந்தினி, இந்நிலையில், பொன்னேரி, ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக கல்லுாரியில் படிக்கின்றனர்.

சுபாஷினிக்கு, கடந்த சில நாட்களுக்கு மன் காய்ச்சல் ஏற்பட்டது. அவரி பரிசோதனை செய்தபோது, டெங்கு உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, குணமடைந்தார்.

இந்நிலையில்,நிஷாந்தினிக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில், சில நாட்கள் சிகிச்சை பெற்றார். பின்னர், செங்கல்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்ததும், மாவட்ட சுகாதார துறையினர், சதுரங்கப்பட்டினம் வட்டார மருத்துவ நிர்வாகத்தினருடன் இணைந்து, கொக்கிலமேடு பகுதியில், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையி, மாணவி நிஷாந்தினிக்கு வெள்ளை அணுக்கள் குறைந்து, இறப்பு ஏற்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பதை, மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே, உறுதியாக தெரிவிக்க முடியும். அவர் வசித்த பகுதியில், மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம் என்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்