இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – குடிமகன்கள் அட்டகாசம்

பொது இடத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்டதால், இளம்பெண் வீட்டின் மீது, குடிமகன்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி திவ்யா (28). இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிலர், எந்நேரமும் வெட்டவெளியில் மது அருந்துவதும், போதை தலைக்கேறியதும், தகராறு செய்து வந்தனர். மேலும், அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், இதனை திவ்யா கண்டித்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து குடிமகன்கள், திவ்யா வீட்டின் முன்பு பீர் பாட்டில்களை உடைத்து வீசி சென்றனர். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து திவ்யா, மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த குடிமகன்கள், இன்று அதிகாலை திவ்யா வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அந்த குண்டுகள் வீட்டின் முன்பு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள், மர்மநபர்கள் தப்பிவிட்டனர்.

தகவலறிந்து மதிச்சியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த குடிமகன்கள் ஸ்ரீதர், சோணைமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்