ரஜினி பிறந்தநாளில் வெளியான அடுத்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி ‘லால் சலாம்‘ படத்தின் மொய்தீன் பாய் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டனர். அதில் ரஜினி எதிரிகளை அடித்து பறக்க விடுவது, தொழுகை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமான் குரலில் ‘ஜலாலி ஜலாலி…‘ என்ற பாடலும் ஒலிக்கிறது. மேலும் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியனுக்கும் அதிக பார்வையாளர்களை கடந்தது. அந்த வகையில் தற்போது வரை இந்த வீடியோ 1.6 மில்லியனுக்கும் அதிக பார்வையாளர்களை கடந்துள்ளது.

இப்படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதில் விஷ்னு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா, விவேக் பிரசன்னா, தங்கதுரை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பாக இன்னொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘வேட்டையன்‘ என பெயரிட்டுள்ளதாக நேற்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்தனர். இவ்வாறு அடுத்தடுத்து வெளியான அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்