ரிலீஸாகும் முன்பே இணையத்தில் லீக் ஆன ‘அவதார் 2’

 

‘அவதார் 2’ திரைப்படம், ரிலீஸாகும் முன்பே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த ‘அவதார் ’ திரைப்படம், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டது.

தொழில்நுட்பத்தில் கலக்கி உலக அளவில் மாஸ் காட்டி வசூல் வேட்டையாடிய  ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம், 13 வருடங்களுக்குப் பிறகு, ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ என்கிற பெயரில் மிகப் பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.

 

சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘அவதார் 2’ படம், உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் டிசம்பர்     16-ந் தேதியான இன்று வெளியாகி உள்ளது.

ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட ரூ.2000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள    ‘அவதார் 2’ திரைப்படம், திரைக்கு வரும் முன்பே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்