பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில், தலிபான்களின் குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான்களின் கிளை பயங்கரவாத அமைப்பு பல்வேற பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதையாட்டி, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் ஷப்சல் பகுதியில் உள்ள சாலையில், வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு திடீரென வெடித்துச் சிதறியது.
இதில் அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில்,, பலுசிஸ்தான் நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்தனர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் மூலம் தெரியவந்துள்ளது.










