ஜோஷிமத் விவகாரத்தில் மைத்திய அரசின் மீது தாக்குதல் நடத்திய மம்தா!

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டம், ஜோஷிமத் நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது. அந்த அளவுக்கு புனித நகரமாக கருதப்பட்டு வரும் இந்த நகரம் இமயமலையையொட்டி, தரையில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக, ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் திடீரென விரிசல் விழத் தொடங்கியது. இதுதவிர, தரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர். இந்த விவகாரம் இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.

இதனை தொடர்ந்து, ஜோஷிமத் நகரில் விரிசல்விட்ட கட்டிடங்களை இடிக்க அரசு முடிவு செய்தது.
இதுபற்றி அரசு நிர்வாகம் தனியாக குழு அமைத்து செயல்படுத்தி வருவதுடன், இஸ்ரோ, ஐ.ஐ.டி. அமைப்புகளுடன் இணைந்து, இந்த விரிசலுக்கான காரணம் பற்றி ஆய்வும் செய்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜோஷிமத் நகரைப் போலவே மேற்கு வங்கத்தில் உள்ள பாஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் நிலம் பூமிக்குள் புதையும் அபாயம் இருக்கிறது. ஜோஷிமத் நகரில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னரே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், மத்திய அரசாங்கம் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஜோஷிமத் நகரில் தற்போது நிலைமை மிகவும் அபாயகரமானது. இதற்கு எந்த வகையிலும் அங்குள்ள மக்கள் பொறுப்பாக முடியாது. பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. என்று தெரிவித்து மத்திய அரசாங்கத்தை சாடியிருக்கிறார் மம்தா.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்