அடுத்த மாதம் திரைக்கு வரும் ஜெயம் ரவியின் ‘அகிலன்‘ திரைப்படம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின்

நடிப்பில் திரைக்கு வெளிவர இருக்கும் படம் ‘அகிலம்‘. இப்படத்தை

‘பூலோகம்‘ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜெயம் ரவியுடன் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இதன்

படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்டது. இதன் போஸ்ட்

புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ்

விடுமுறையின் போதே படம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில்,

தற்போது பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் ஜெயம் ரவி கடல்கொள்ளை கேங்ஸ்டராக நடிக்கிறார்.

ப்ரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவர்கள் தவிர

தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார்.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்