இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்‘. இதில் கதாநாயகியாக நடிகை ரீத்துவர்மா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராதிகா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இதன் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.
சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. ‘துருவ நட்சத்திரம்‘ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்திலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடலையும் படக்குழு நீக்கியது. இந்நிலையில் இந்த பாடல் புதிய காட்சிகளுடன் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.










