‘கேப்டன் மில்லர்‘ திரைப்படத்தின் புதிய அப்டேட்டால் உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்‘. இதில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரலாற்று பாணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்