விரைவில் உருவாகும் 7G ரெயின்போ காலனி 2

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘நானே வருவேன்‘ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘சாணிக் காயிதம், பாகசூரன்‘ போன்ற படங்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘7G ரெயின்போ காலனி‘. இதில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்து இருந்தனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரவி கிருஷ்ணா உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்