‘புஷ்பா படம் வருத்தத்தை அளிக்கிறது‘ – முன்னாள் ஐ.ஜி காந்தாராவ் விளக்கம்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் வெளியான படம் ‘புஷ்பா‘. இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய மற்றும் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் அதே கூட்டணி உடன் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் குறித்து ஆந்திர செம்மர கடத்தல் அதிரடிப்படை முன்னாள் ஐ.ஜி. காந்தாராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகள் எடுத்த முயற்சிகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். செம்மர கடத்தல்காரனை ஹீரோவாக காட்டிவிட்டு, போலீசார் லஞ்சம் வாங்குவது போல் காட்டியது வருத்தம் அளிக்கிறது. புஷ்பா 2 பாகத்திலாவது போலீசாரின் தியாகத்தை காண்பிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்