சரவண சக்தி இயக்கத்தில் விமல் மற்றும் தான்யா ஹோப் இணைந்து நடித்துள்ள படம் ‘குலசாமி‘. இதில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேற்று (ஏப்ரல் 21) வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இதனால் மே 5-க்கு பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். இதுபற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கையில், “ஏப்ரல் 21-ம் தேதி ‘குலசாமி‘ படம் வெளியிட திட்டமிடப்பட்டது.
உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சாதகமாக இல்லை. எனவே, எங்களின் ‘குலசாமி‘ திரைப்படத்தின் வெளியீடு உலகமெங்கும் உள்ள ரசிகர்களை காணும் வகையில் 05.05.23 அன்று மாற்றப்பட்டுள்ளது.










