‘AK63‘ அஜித்தை லாக் செய்த அட்லீ?

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘துணிவு‘ படம் ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியாகி மக்களிடம்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாகியும் படக்குழு இன்னும் இந்த படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் இதே நாளில் வெளியான ‘வாரிசு‘ படத்தின் வசூலை அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ‘துணிவு‘ படத்திற்கு பின் அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் நாட்களில் தொடங்கப்போவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், விக்னேஷ் சிவனுடன் ‘ Ak 62‘  படத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்குமார் இயக்குனர் அட்லீயுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ, அஜித்தை வைத்து கண்டிப்பாக படம் பண்ணுவேன் என்று பல முறை பேட்டிகளில் கூறியிருந்தார். தற்போது அது நிறைவேறியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்