விரைவில் திருமணம் செய்யும் பிரபல தெலுங்கு நடிகர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சர்வானந்த். இவர் எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் காதலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சர்வானந்த் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சாப்ட்வேர் இன்ஜினியரான ரக்ஷிதா ரெட்டிக்கும் இவருக்கும் நேற்று (ஜனவரி.26) ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். திருமணம் தேதி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்