ஜூடோ ரத்தினத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம். வயது மூப்பு காரணமாக நேற்று மாலை வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் காலமானார். அவரது உடல் திரையுலகினரின் அஞ்சலிக்காக சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய ஸ்டன்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி, சத்யராஜ், கமல், மனோபாலா, எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்களும், ஸ்டன்ட் மாஸ்டர்கள், கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினார்.

ஜூடோ ரத்தினம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “1976-ல் இருந்து அவருடன் எனக்கு பழக்கம் உள்ளது. சண்டைக்காட்சியில் தனக்கு என்று ஒரு தனி ஸ்டைலை திரையுலகிற்கு கொண்டு வந்தவர் ஜூடோ ரத்தினம். அதேப்போன்று சூப்பர் சுப்புராயன், தர்மா போன்ற ஏராளமான ஸ்டன்ட் மாஸ்டர்களையும் உருவாக்கியவர். நடிகர்களுக்கு பாதுகாப்பு போன்று ஸ்டன்ட் கலைஞர்களையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார். மிகவும் மென்மையானவர். முரட்டுக்காளை ரயில் சண்டையை இப்போது வரை யாராலும் மறக்க முடியாது. அந்த மாதிரி ஒரு மனிதரை  ஸ்டன்ட் யூனியனில் பார்ப்பது அபூர்வம். ஒரு சரித்திரம் படைத்து மிகப்பெரிய சாதனை படைத்தவர். 93 வயது வரை பூரண வாழ்க்கை வாழ்ந்து அமரராகி உள்ளார். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்