6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் ரஜினியின் இளைய மகள்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தற்போது 6 வருடங்களுக்கு பின் மீண்டும் படங்களை இயக்குவதில் இறங்கியுள்ளார்.

இவர் ரஜினியின் படங்களான ‘பாபா, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி‘ உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார். அதன் பிறகு ‘கோவா‘ என்ற படத்தை தயாரித்தார் மற்றும் ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ அனிமேஷன் படம் மற்றும் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி-2‘ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு வெப் தொடரை இயக்கப் போகிறார் ஐஸ்வர்யா. இந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்