அமைச்சர் மற்றும் நடிகருமான உதயநதி தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பிறகு தனது கடைசி படமாக ‘மாமன்னன்‘ என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து இந்த மாதத்தின் இறுதியில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த ஒரு அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி ‘மாமன்னன்‘ படத்தின் டிரைலர் இன்று(ஜூன்.16) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.










