நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘மாவீரன்‘. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் வருகின்ற ஜூலை 14-ம் தேதியன்று திரையில் வெளியாக உள்ளது. இதில் அதிதி ஷங்கர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குனர் மடோன் அஸ்வின் பேட்டியில் கூறியதாவது, “ மாவீரன் படம் நல்ல என்டர்டெயின்மெண்ட் ஆன கமர்ஷியல் படம். சிவகார்த்திகேயன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
இதுவரை வந்த சிவகார்த்திகேயன் படங்களில் இந்தப்படம் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் அண்ணன் தம்பியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளோம். ‘மண்டேலா‘ படத்தில் வருவது போல் யோகி பாபு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் மற்றும் சுனில் இருவரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிஷ்கினுக்கு படத்தில் குறைவான வசனம் தான் “ என்று கூறியுள்ளார்.










