ஷாருக்கான் – தீபிகா படுகோனே உருவபொம்மை எரிப்பு!

 

பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோரின் உருவபொம்மையை எரித்த சம்பவம்  பாலிவுட் படஉலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனே ஜோடியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘பதான்’. இ  ந்தப் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் ஷாருக்கான் பச்சை நிற ஆடையும், தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும் அணிந்தவாறு  ‘டூயட்’ பாடுகின்றனர்.

இது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே அணிந்திருந்த ஆடை நிறத்தை சுட்டிக்காட்டி “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காரசார வாதங்கள் எழுந்துள்ளன.

இந்தூரில் வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் படத்தின் நாயகன் ஷாருக் கான், நாயகி தீபிகா படுகோன் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்தப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கோஷமிட்டனர்.

தடை செய்யாவிட்டால் ‘பதான்’ திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்துக் கொளுத்துவோம்’என்று ஆவேசமாக முழங்கினர்.

பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோரின் கொடும்பாவியை எரித்து,‘பதான்’ திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்துக் கொளுத்துவோம்’என்று போராட்டம் நடத்திய சம்பவம் சமூக வலதளங்களில்வைரலாக மாறியுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்