உலக சாம்பியன்கள் ஸ்வியாடெக், ரபேல் நடால் – சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவிப்பு

உலக சாம்பியன்கள் ஸ்வியாடெக், ரபேல் நடால் – சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவிப்பு

சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்) ஸ்வியாடெக், ரபேல் நடால் ஆகியோரை உலக சாம்பியன்களாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில், டென்னிஸ் போட்டிகளில் விளையாடும் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் உலக சாம்பியன்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். இதையொட்டி, 2022 ஆண்டுக்கான உலக சாம்பியன்களாக இகா ஸ்வியாடெக், ரபேல் நடால் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

4 கிராண்ட்ஸ்லாம், 2 அணிகள் போட்டி, பீல்லி ஜீன் கிங் கோப்பை, டேவிஸ் கோப்பை முடிவுகள் அடிப்படையில் இத்தோ்வு நடைபெறுகிறது. நடால் உலக சாம்பியனாக தோ்வு பெறுவது 5வது முறை. அதேநேரத்தில் ஸ்வியாடெக் முதன்முறையாக உலக சாம்பியனாக தோ்வு பெற்றுள்ளாா்.

இரட்டையா் பிரிவில் பாா்பரா-கேத்ரீனாவும், ஆடவரில் ராஜீவ் ராம்-ஜோ சாலிஸ்பரியும் உலக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, ஸ்வியாடெக், ரபேல் நடால் ஆகியோர், இந்தாண்டு 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்