விளையாட்டு துறையில் கால் பதித்த விஜய் தேவரகொண்டா

தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அதிகமான இளம் ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்துள்ளவர். தற்போது வாலிபால் அணிக்கு இணை ஓனராக ஆகியுள்ளார். பிரைம் வாலிபால் லீக் என தனியார் அமைப்பு ஒன்று இந்திய மாநகரங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் சென்னை, கொச்சி, கோழிக்காடு, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதபாத், கொல்கத்தா  ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதில் ஹைதராபாத் அணியான ‘த பிளாக் ஹாக்ஸ்‘ அணியின் இணை ஓனராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் பொறுப்பேற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா. இந்த அணியின் முதன்மை ஓனராக அபிஷேக் ரெட்டி கன்கனலா என்பவர் இருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்