நடிகரின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கவுண்டமணி

நடிகர் கவுண்டமணி 80, 90-களில் தனது நகைச்சுவை நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதே காலக்கட்டத்தில் நடிகராகவும், இயக்குனராகவும் பணி புரிந்த ராமதாஸ் இவருடைய நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில், ராமதாஸ் மாரடைப்பால் இன்று(ஜன.24) உயிரிழந்தார்.

இதையடுத்து இவரின் உடல் கே.கே.நகர் முனுசாமி சாலையிலுள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராமதாசின் இறப்பு செய்தி கேட்ட உடனே கவுண்டமணி நேரில் வந்து கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்பின் பேசிய அவர் , எனது நீண்ட கால நண்பணை இழந்துவிட்டேன். ராமதாஸ் மறைவு எனது வாழ்நாளில் மறக்க முடியாத துயரத்தை கொடுத்துள்ளது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்