திரைப்பட உதவி இயக்குனர் திடீர் மரணம்

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ராமகிருஷ்ணா(வயது 26).  இவர் முன்னணி நடிகர் ஒருவரின் படப்பிடிப்பு தளத்தில் மயங்கிவிழுந்து இறந்துவிட்டார்.

இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இவரை , கடவுள் சீக்கிரம் அழைத்துக்கொண்டார். இறப்பதற்கு முன் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். துரதிஷ்ட வசமாக என்னால் பேச முடியவில்லை‘ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்