இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘விஜய் 68‘ குறித்த அப்டேட் சில நாட்களாக வெளியாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.
தற்போது இப்படத்தினை குறித்த இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த ‘குஷி‘ படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இதன் பிறகு ‘நண்பன், மெர்சல், வாரிசு‘ போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதில் ‘மெர்சல்‘ படத்தில் வில்லனாக நடித்தார். பின்னர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு‘ படத்திலும் வில்லனாக நடித்தார்.
தற்போது ‘மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா-2‘ ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 68-வது படத்திலும் அவரை வில்லனாக நடிக்க வைக்க அவரிடத்தில் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.










