ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய்க்கு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ‘மாஸ்டர்‘ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. அதே போல் ‘ஜெய் பீம்‘ படத்தில் நடித்ததற்காக நடிகர் மணிகண்டனுக்கு துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட உள்ளது.
மேலும், ‘தலைவி‘ படத்தில் நடித்ததற்காக பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத், ‘சார்பட்டா பரம்பரை‘ பட இயக்குனர் பா.ரஞ்சித், ‘மாநாடு‘ படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளர் யுவர் சங்கர் ராஜா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.










