ரஜினிகாந்து க்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் செய்த செயல்!

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடுவைப் பற்றி பேசும்போது, 1996-களிலேயே ஐதராபாத் நகரை ஐ.டி துறை நகரமாக சந்திரபாபு நாயுடு மாற்றியதைப் பற்றியும், விஷன் 2047 மூலம் ஆந்திராவை முன்னேற்றுவார் என்றும் பாராட்டிப் பேசினார் ரஜினிகாந்த்.

இது தற்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த முன்னாள் நடிகையும், ஆந்திரவின் அமைச்சருமான ரோஜா உட்பட பலரும் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் ரஜினிகாந்தைப் பற்றி தரக் குறைவாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ‘ராமபானம்‘ என்ற தெலுங்குப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சீனியர் தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவிடம் இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “ எப்போது பேசினாலும் ரஜினிகாந்த் சிறப்பாகப் பேசுவார். அதைவிட முக்கியம் அவர் எப்போதும் உண்மையே பேசுவார். ரஜினி பேசியது நூற்றுக்கு நூறு சரி“ என்று பதிலளித்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்