தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சாகுந்தலம்‘ படம் பெரும் தோல்வியடைந்தது.
இதனால் இப்படத்தின் தயாரிப்பளாரும், ரசிகர்களும் இவரை விமர்சித்து வந்தனர். ஆனாலும் இப்படம் பிரான்சில் நடைபெற்ற ‘கேன்ஸ்‘ திரைப்பட விழாவில் 4 சர்வதேச விருதுகளை வென்றது.
இப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ‘குஷி‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து ‘சிட்டாடல்‘ என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். மேலும் ‘சென்னை ஸ்டோரி‘ என்ற ஆங்கில படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையில் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 27 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் இருக்கின்றனர்.
அதனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஏகப்பட்ட லைக்ஸ் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது புல்வெளியில் தான் படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை தலைகீழாக பதிவிட்டு இருக்கிறார் நடிகை சமந்தா. தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் ஓரிரு மணி நேரங்களிலேயே 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.










