தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு தனிஇடத்தைப் பிடித்துள்ள யோகி பாபு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து கதாநாயகனாக நடித்து வருகிறார் யோகி பாபு.
அந்த வகையில் தற்போது இயக்குனர் ராதா மோகன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் ராதா மோகன் ‘அபியும் நானும், மொழி, பயணம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.
மேலும் இவர் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கிய ‘பொம்மை‘ திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதையடுத்து தற்போது யோகி பாபுவை வைத்து இயக்க இருக்கிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.










