நடிகர் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட்டது

நடிகர் சரத்பாபு சில மாதங்களாக உடல் நிலைப்பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடல் ஐதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னையில் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா என பல்வேறு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதன் பின் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்