முதன்முறையாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் ‘வணக்கம் சென்னை‘ படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். மேலும் அவர் ‘மாஸ்கோவின் காவிரி‘ என்ற படத்தில் தான் அறிமுகமாகி இருந்தார்.

சின்மயி பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கில் பல்வேறு பாடல்கள் பாடியிருக்கிறார். ‘கன்னத்தில் முத்தமிட்டாள்‘ பாடலை பாடி அறிமுகமான சின்மயி தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலம் ஆனார்.

இவர் தெலுங்கு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது.  இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியே தெரிவிக்காததால், நயன்தாராவை போல் சின்மயியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா என்ற சர்ச்சை பரவியது.

அதையெல்லாம் சின்மயி தொடர்ந்து மறுத்து வந்தார். தனது மகன்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என பெயர் வைத்துள்ள சின்மயி, மகன்களின் புகைப்படத்தை நீண்ட நாட்களாக சோஷியல் மீடியாவில் வெளியிடாமல் இருந்தார்.

சமீபத்தில் சின்மயியின் குழந்தைகளை பார்க்க போட்டோக்களை வெளியிடும் படி ரசிகர்கள் கேட்க, முதன்முதலாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை சின்மயி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் க்யூட் பேபிஸ் என தங்களது அன்பினை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்