இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இருவரும் இணைந்து நடித்து வெளியான படம் ‘போர்த்தொழில்‘. இதில் இவர்களுடன் இணைந்து நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருந்தது. இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் படம் வெளியான போது பாராட்டினார்கள்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த படத்தை பார்த்த சரத்குமார் மனைவி ராதிகா படத்தைப் மிகவும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
அதில், நடிகை ராதிகா பதிவிட்டிருப்பது, “ நல்ல சினிமா… பத்திரிகையாளர்களின் சிறந்த பாராட்டுக்கள் மற்றும் வாய் வழியாக இந்தப் படம் மேஜிக் பெற்றது. சினிமாவில் ஒவ்வொரு நாளும் ஒன்றைக் கற்கிறோம்,
இது வழக்கத்திற்கு மாறானது, மேலும் நட்சத்திரங்களுக்கு புதிய பாதையைக் காட்டியுள்ளது. கன்டென்ட் தான் கிங் என்பதை ‘போர் தொழில்‘ நிரூபித்துள்ளது “ என பாராட்டி பதிவிட்டுள்ளார்.










