நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் திரையுலகில் ‘ரன்‘ திரைப்படம் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். இவர் 20 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே திருமணம் செய்து கொண்ட நிலையில், சினிமாவை விட்டு 10 ஆண்டுகளாக விலகி இருந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் ‘விமானம், டெஸ்ட்‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் , சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் அளித்துள்ள பேட்டியில், அவர் கூறியதாவது, “நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விமானம் படத்தின் கதையை கேட்டதும் பிடித்து போனதால் இந்த படத்தில் நடித்தேன். நான் எப்போதும் படத்தின் கதை, அதில் எனக்கு உள்ள கதாபாத்திரம் ஆகிய இரண்டு விஷயங்களை மட்டும் தான் மனதில் வைத்து தேர்வு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.










