ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பொம்மை‘. இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படம் ஜூன் 16-ம் தேதி திரையில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் பொம்மைகள் மீது அதீத ஆசையுடன் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா அந்த பொம்மைகளுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் தான் ஆவேசமாகி விடுகிறார். அப்படி ஒரு கற்பனை உலகத்தில் அவர் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த கற்பனை உலகத்தில் அவர் லிமிட் தாண்டி சென்று விடுகிறார்.
இதையடுத்து என்னென்ன விபரீதங்கள் ஏற்படுகிறது என்பதுதான் இந்த பொம்மை படத்தின் கதை என்பது அந்த டிரைலரில் தெரிகிறது. அதோடு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியும் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ‘பொம்மை‘ படத்தின் டிரைலர் எதிர்பார்ப்புகளை தூண்டிவிடும் வகையில் அமைந்திருக்கிறது.










