மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘இந்தியன்-2‘ – படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2‘ படத்தில் நடித்தில் நடித்து வருகிறார். இதன் முதல் பாகம் 1996-ல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதில் சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் பெரும் பகுதிகள் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்று, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.24 கோடி கட்டணமாக விமான நிலைய நிர்வாகத்திடம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.

அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றது. விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் படக்குழுவினர் விமான நிலையத்தின் கழிவறை பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர்.

இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டனர். இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக படம் வெளியாகும் தேதி தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்