ஷாக்: மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய நடிகை திரிஷா

தமிழ் சினிமாவில் 21 வருடங்களாக கதாநாயகியாக நடித்து வரும் ஒரே நடிகை திரிஷா மட்டுமே ஆவார். இவர் 20002-ம் ஆண்டு ‘மௌனம் பேசியதே‘ படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

அதன்பின் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த இவருக்கு நடுவில் சில வருடங்கள் சிறந்த வெற்றி படங்கள் அமையவில்லை. ஆனால், ‘96‘ படத்தின் மூலம் மீண்டும் அவர் உச்சத்திற்கு வந்தார். இதையடுத்து வெளிவந்த ‘பொன்னியின் செல்வன் 1,2 ஆகிய படங்கள் திரிஷாவிற்கு மீண்டும் ஒரு நல்ல வரவேற்பை தந்தது.

அதன் தொடர்ச்சியாக விஜய் நடிக்கும் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அஜித்தின் ‘விடாமுயற்சி‘ படத்திலும், தனுஷின் பெயரிடப்படாத 50- வது படத்திலும் அவர்தான் கதாநாயகி என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

மேலும் திரிஷாவின் அடுத்த வெளியீடாக ‘ த ரோட்‘ படம் வெளிவர உள்ளது. இதை பார்க்கும் போது மீண்டும் தனது ஆரம்ப கால நிலைக்கு திரும்புகிறார் நடிகை திரிஷா என தெரிகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்