பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
பிரதமர் விரைவில் மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை காந்திநகரின் ரைசன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தனது தாயாரின் ஆசியை பெற்றார். குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








