தைவானில் கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக நீட்டிப்பு…….

1927-ம் ஆண்டு முதல் 1949 வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதன் பிறகு, பல தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய தைவான், தனிநாடாக உருவெடுத்தது.
அதை நாடாக சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. இப்போதும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதிதான் என்று சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. மேலும், தைவானுடன் மற்ற நாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

இந்த நிலையில், சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, சீன ராணுவம் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து மிகப்பெரிய அளவில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் பயிற்சி தங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என்று தைவான் குற்றம்சாட்டியது.

இதனால், இரு நாடுகளுக்கிடையே போர்ப் பதற்றம் உருவானது. இந்த நிலையில், தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை தைவான் மேற்கொண்டுவருகிறது.
ஏற்கெனவே தைவானில் ஒவ்வோர் ஆணும் கட்டாயம் நான்கு மாதங்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் எனச் சட்டம் இருக்கிறது. தற்போது அதை ஒரு வருட சேவையாக தைவான் அரசு நீட்டித்திருக்கிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்