தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.

உடல்நலக்குறைவுக் காரணமாக, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயை இரண்டு தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். இந்த நிலையில், நேற்று (பிப்.24) இரவு பழனியம்மாள் நாச்சியார் உயிரிழந்தார்.

தாயின் மறைவுச் செய்தியை அறிந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர், பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தனது தாயார் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அப்போது, தாயாரின் காலைப் பிடித்து கதறி அழுதார்.

ஓ.பன்னீர்செல்வம் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்