நயன்தாராவுக்கு ஆதரவான கமெண்ட்டை நீக்கியதற்கு சின்மயி கடும் எதிர்ப்பு!

பிரபல முன்னணி நடிகையான நயன்தாரா பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைகளில் மட்டுமே கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார். மேலும், இவருக்கு மக்களிடையே ’லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டமும் கிடைத்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இவரது நடிப்பில் ‘கனெக்ட்‘ என்கிற ’ஹாரர்’ படம் வெளியாகி இருந்தது.

பொதுவாக தான் நடிக்கும் எந்தவொரு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளாத நயன்தாரா, தங்களது சொந்த தயாரிப்பு என்பதால் இந்தப் படத்தின் சிறப்பு காட்சியின்போது சென்னையில் உள்ள ஒரு பிரபல தியேட்டருக்கு கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த ஆடை குறித்து பல விதமான கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.

நயன்தாராவின் புகைப்படத்திற்கு கீழ் நெட்டிசன்கள் பலர் ஆபாசமான கருத்தை வெளியிட்டு வந்தனார். இந்நிலையில், இது குறித்து பின்னணி பாடகி சின்மயி, அவர்களை கண்டிக்கும் விதமாக அதே பக்கத்தில் அவர் ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வலைதள நிர்வாகம் அவர் கருத்தை மற்றவர்கள் பார்க்க முடியாத வகையில் மறைத்துவிட்டார்கள். இந்நிலையில், இதைப் பார்த்து இன்னும் கோபமான சின்மயி, “ஆபாசமான கருத்துக்கள் வருவதாக தெரிந்தால் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக என்னுடைய கருத்தை மற்றவர்கள் பார்வைக்கு செல்லாமல் தடுப்பதில் இருந்தே உங்கள் அட்மினின் லட்சணம் தெரிகிறது நிஜமாகவே பரிதாபமாக இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்