நடிகை மிருணாள் தாக்கூர் உடன் நடிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன் – நடிகையிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை…

சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்‘ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இப்போது மிகப்பெரிய வியாபாரமாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து சாய்பல்லவி விலகி விட்டாராம்.

இவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்த ‘டாக்டர் மற்றும் டான்‘ படங்களில் நடித்த பிரியங்கா மோகனை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் யோசனை செய்திருந்தனர். ஆனால் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். ஏனென்றால் ஏற்கனவே இரண்டு முறை அவருடன் ஜோடி போட்டு நடித்து விட்டேன், மீண்டும் இதே கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்காது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அது மட்டுமின்றி துல்கர் சல்மான் பட நடிகையை இந்த படத்தில் நடிக்க வைக்குமாறு படக்குழுவிடம் சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்துள்ளார்.

அதாவது சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘சீதா ராமம்‘ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூரை இந்த படத்தில் நடிக்க வைக்க கேட்டுக் கொண்டுள்ளார். சிவகார்த்திகேயனின் பேச்சை கேட்டு இப்போது பட குழுவினரும் மிருணாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு அவர் சம்மதித்தால் இவரின் முதல் தமிழ் படமாக இதுவாக இருக்கும். மேலும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்