உடல் எடையை குறைக்க தீவிரமாக ஒர்க்அவுட் செய்து வரும் நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்‘ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை-4‘ படத்தில் நடித்து வருகிறார்.

இதைத் தவிர தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘போலா சங்கர்‘ படத்திலும் நடிக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் 21 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள தமன்னா, தனது சம்பந்தப்பட்ட வீடியோ புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போது தான் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

அதோடு தான் தனது உடல் எடையை 10 கிலோ குறைப்பதற்கு முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ள தமன்னா, தனது பயிற்சியாளரின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் தீவிரமான ஒர்க் அவுட்டில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்