தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் ‘கேப்டன் மில்லர்‘

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

இவர்களுடன் இணைந்து சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட அந்த கிராமத்தில் எந்த அனுமதியும் பெறாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டதாக அரிட்டாபட்டி பாதுகாப்பு சங்கம் சார்பில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கு முன்பு தென்காசியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் விதமாக குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படப்பிடிப்பை கலெக்டர் நிறுத்தினர். இப்போது மீண்டும் அதுபோன்று ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்