தெலுங்கில் சாதனை படைத்து வரும் ‘பிச்சைக்காரன்-2‘

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்‘. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்திருந்தார். இப்படம் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது. இப்படம் 1500 தியேட்டர்களில் வெளியான நிலையில் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 3.25 கோடி ரூபாய் வசூலித்தது.

மேலும் தெலுங்கில் முதல் நாளில் மட்டும் 4.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் இப்படம் இரண்டாவது நாளில், உலகம் முழுக்க 15 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்