சம்யுக்தா- விஷ்ணுகாந்த் ஜோடியை கமெண்டால் கிழித்து வரும் ரசிகர்கள்

சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும்-விஷ்ணுகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கல்யாணமாகி 2 மாதங்களே ஆகிறது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டனர். ஆனால் தங்களுக்கு இடையேயான பிரச்சினையை குறித்து பொதுவெளியில் மாறி மாறி பேசி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் இவர்களின் சண்டை தற்போது அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லி அனுதாபம் தேடும் நிலைக்கு சென்றுவிட்டது. அதில் உச்சபட்சமாக ப்ரீயட்ஸ் நேரத்தில் கூட விஷ்ணுகாந்த் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், 24 மணி நேரமும் ரொமான்ஸ் செய்வதிலேயே குறியாக இருப்பார் என்றும் சம்யுக்தா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதற்கு விஷ்ணுகாந்தும் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதை பார்த்து கடுப்பான மக்கள் அனுதாபத்தை பெறுவதற்காக தனிப்பட்ட அந்தரங்கத்தை பொதுவெளியில் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? என இருவரையும் லெப்ட் ரைட் வாங்கி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்