தெலுங்கில் வசூலை தெறிக்கவிட்ட ‘வாத்தி‘ – கொண்டாட்டத்தில் படக்குழு

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘வாத்தி‘. தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படம் அங்கு ‘சார்‘ என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் மூன்றே நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்ததாக படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு.

அந்த நிகழ்வில் கதாநாயகன் தனுஷை தவிர்த்து தயாரிப்பாளர்கள், இயக்குனர் வெங்கி அட்லூரி, சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், சுமந்த், தணிகல பரணி, ஹைப்பர் ஆதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் கதாநாயகன் தனுஷ் ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி அவருடைய படங்களுக்கு தெலுங்கிலும் தனி மார்க்கெட் உருவாகும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்