வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே பணி நாட்களாக அறிவித்து, பிரிட்டனில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 61 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே பணி நாட்களாக அறிவித்து, ஆறு மாதங்களாக பரிசோதனை செய்தது. இந்த சோதனை முயற்சியில், ஆறு மாதங்களில் ஊழியர்களின் பணி திறன், நிறுவனங்களின் வருவாய் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஐந்து நாட்கள் பணியை விட நான்கு நாட்கள் மட்டுமே பணி செய்யும் போது, ஊழியர்கள் உற்சாகமாகப் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆறு மாதங்களில் நிறுவனங்களின் வருவாய் 35% வரை அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மன அழுத்தமின்றி, நல்ல மனநிலையோடு, புதுப்புது யோசனைகளை முன்வைத்து பணியாற்றினர் என சோதனையில் பங்கேற்ற நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் வரும் நாட்களில் பிரிட்டனில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே பணி நாளாக அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.










