தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தனுஷ் மற்றும் சிம்பு இருக்கிறார்கள். தொடர்ந்து பல விதமான படங்களில் நடித்து வரும் இந்த நடிகர்கள் ஒரு முக்கிய படத்திற்காக இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் படங்களில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், படங்களை இயக்குவது, தயாரிப்பு, பாடல் வரி எழுதுவது, இசை என பன்முக தன்மை கொண்டவர். தற்போது அவர் நடித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்‘ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர் சிம்பு இப்போது அவரது 48-வது படத்திற்கான வேலைகளை பார்த்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால், சில பல காரணங்களால் சிம்புவினால் அந்த படங்களில் இணைந்து நடிக்க முடியவில்லை. நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நண்பர்கள். இந்நிலையில் இப்போது இந்த இருவரும் ஒரு முக்கிய மற்றும் பெரிய படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜாவின் ‘பயோ‘ படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பு நிறுவனமான கனெக்ட் மீடியா உறுதியும் செய்திருந்தது. இளையராஜா பயோ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிம்புவை அணுகியிருக்கிறார்களாம். சிம்பு தரப்பிலிருந்து இது குறித்த எந்த பதிலும் வெளிவரவில்லையாம். இசைஞானி இளையராஜாவின் இந்த பயோ படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பேன் இந்திய படமாக உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.










