நடிகர் ஜெயம்ரவி மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது ‘சைரன்‘ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக புதுமுக இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு ‘ஜீனி‘ என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை கிருத்தி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் அடுத்த வருடம் ஏப்ரலில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.










