வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூரில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பொங்கல் வைத்து, சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் நயன்தாரா கோவிலுக்கு வந்த உடனே இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்களும், ரசிகர்களும் குவிந்துவிட்டனர். அய்யம்பேட்டை போலீஸ் ஆய்வாளர் கலைவாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.










