சீரியலில் நடிக்கும் எஸ்ஏ சந்திரசேகர்…!

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்ஏசந்திரசேகர். இந்நிலையில் சமீப காலமாக எஸ்ஏ சந்திரசேகர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் ‘டிராபிக் ராமசாமி, கொடி, நான் கடவுள் இல்லை, மாநாடு‘ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் ஒரு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது குறித்து நடிகை ராதிகா கூறியதாவது, “ வாழ்க்கை நம்மை பல்வேறு பயணங்களுக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களை கற்றுத் தருகிறது.

நமக்கு நாமே சிறந்த வடிவத்தில் வளர்கிறோம். எஸ்ஏ சந்திரசேகர் சார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்‘ என்ற தொடரை ஆரம்பித்துள்ளோம். அனைவரின் வாழ்த்துகளும் தேவை“, என்று நடிகை ராதிகா கூறியுள்ளார். மேலும் விஜய்யின் தந்தையான எஸ்ஏ சந்திரசேகர் டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்